தரமான கூட்டணியில் SK 23 படம்., சிவகார்த்திகேயன் ஹீரோயின் இவர்தானாம்., ஏ. ஆர் முருகதாஸ் அப்டேட்!!

0
தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி ஹீரோக்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் சிவகார்த்திகேயன். தற்போது இவர் உலக நாயகன் தயாரிப்பில் தனது 21வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். சின்னத்திரையில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக அறிமுகமான இவர் பின்னர் தனது தனித்துவமான திறமைகளை வெளிப்படுத்தி திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் அளவிற்கு உருவெடுத்தார்.
பின்னர் நடிகனாக மட்டுமல்லாது ஒரு பாடகராக பாடல் ஆசிரியர் மற்றும் தயாரிப்பாளர் என தனது பன்முக திறமையை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் இவர் தனது 23 வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கான பூஜை மிக சிறப்பாக நடந்துள்ளது. அப்போது எடுத்துக் கொண்டுள்ள புகைப்படத்தை இயக்குனர் முருகதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இப்படத்தில் ஹீரோயினாக நடிகை ருக்மணி நடிக்க உள்ளார். இதோடு SK 23 படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here