அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்ல இனி இவங்களுக்கு ஓய்வூதியம்…, மாதம் ரூ. 2000 வழங்க முதல்வர் அறிவிப்பு!!

0
சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தற்போது தமிழகம், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இதில், ஒடிசாவை பொறுத்தவரையில் நாடாளுமன்ற தேர்தல், சட்டப்பேரவை தேர்தல் என இரண்டு தேர்தல்கள் நடப்பு வருடம் நடைபெற உள்ளதால், சட்டப்பேரவையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அமல்படுத்தி வருகிறார். சமீபத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 வழங்கப்படும் என அறிவித்த நிலையில், நெசவாளர் மற்றும் கைவினைக் கலைஞர்களுக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ. 2000 வழங்க உள்ளதாக ஒடிசா முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேலும், 50 முதல் 80 வயதுக்குட்பட்ட ஆண் நெசவாளர்கள், உதவியாளர்கள் மற்றும் கைவினை கலைஞர்களுக்கும், 40 முதல் 80 வயதுக்குட்பட்ட பெண் நெசவாளர்கள், அவர்களின் உதவியாளர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்களும் இந்த ஓய்வூதிய திட்டத்தில் பங்கு பெறலாம். 80 வயதுக்கு மேற்பட்ட நெசவாளர்கள், கைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ள இதர தொழிலாளர்கள், கைவினைக் கலைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 ஓய்வூதியம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here