இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா மற்றும் நடாசா ஸ்டான்கோவிக் ஆகியோர் ஜோடிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை ஹர்திக் பாண்ட்யா தனது இன்ஸ்டாகிராமில் குழந்தையின் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.
தந்தை ஆனார் ஹர்திக் பாண்ட்யா:
கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா மற்றும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும், நடிகர்-நடனக் கலைஞருமான நடாசா ஸ்டான்கோவிக், ஜோடிக்கு முதல் குழந்தையான ஆண் குழந்தையை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்திகளைப் பகிர்ந்து கொண்ட ஹர்திக் பாண்ட்யா, “நாங்கள் எங்கள் ஆண் குழந்தையுடன் ஆசீர்வதிக்கப்படுகிறோம்,” என்று பதிவிட்டு உள்ளார்.
இந்திய அணிக்கு அடுத்த தோனி இவர் தான் – சுரேஷ் ரெய்னா சொல்கிறார்!!
ஹர்திக் பாண்ட்யா தனது மகனின் கையைப் பிடித்துக் கொண்ட ஒரு படத்தை வெளியிட்டார். இருப்பினும், குழந்தையின் முகம் புகைப்படத்தில் தெரியவில்லை. அனைவரிடமிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் இணைய கிளிக் பண்ணுங்க!!
ஜனவரி 1 ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தத்தை அறிவித்த ஹர்திக் பாண்ட்யா பல மாதங்களுக்குப் பிறகு, மே 31ம் தேதி நடாசா கர்ப்பமடைந்த தகவலை வெளியிட்டார். அதில் எங்கள் வாழ்க்கையின் இந்த புதிய உயரத்திற்கு நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம், மேலும் உங்கள் ஆசீர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் ஏற்றுக்கொள்கிறேன் என்று நடாசா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார்.