Wednesday, April 24, 2024

தனுஷின் பாலிவுட் படம் – மதுரையில் படப்பிடிப்பு!!

Must Read

தனுஷின் பாலிவுட் படம் ‘அத்ராங்கி ரே’ பட ஷூட்டிங் மதுரையில் வரும் அக்டோபர் மாதம் துவங்க உள்ளது.

மதுரையில் படப்பிடிப்பு

‘அத்ராங்கி ரே ‘ படத்தின் ஷுட்டிங் கடந்த மார்ச் மாதமே துவங்கி நடைபெற்று வந்தது. வாரணாசியில் சில முக்கிய இடங்களில் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவ துவங்கியதால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுவிட்டது.

அடடே!! அப்படியா!! ⇒⇒ஆண் குழந்தைக்கு தந்தை ஆனார் ஹர்திக் பாண்ட்யா – ரசிகர்கள் வாழ்த்து மழை!!

அதனை தொடர்ந்து வரும் அக்டோபர் மாதம் அடுத்தகட்ட ஷுட்டிங்கை படக்குழு துவங்கவுள்ளது. மதுரையில் தான் இந்த ஷுட்டிங் துவங்க உள்ளது. அதனைத் தொடர்ந்து டெல்லி மற்றும் மும்பையில் படப்பிடிப்பு நடத்த இயக்குனர் திட்டமிட்டுள்ளார்.

3 மாதங்கள் படப்பிடிப்பு

தொடர்ந்து இடைவெளியில்லாமல் மூன்று மாதங்களுக்கு ஷூட்டிங் நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. மேலும், இது 2021 காதலர் தினத்தில் உலகளவில் சினிமா வெளியிடப்போவதாக திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனந்த் எல் ராய் இயக்கியுள்ள இந்திய காதல் படத்தில், அக்‌ஷய் குமார் மற்றும் தனுஷ் ஜோடியாக சாரா அலிகான் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இந்த திரைப்படம் டி-சீரிஸ், கலர் யெல்லோ புரொடக்ஷன்ஸ் மற்றும் கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் ஆகியவற்றின் கீழ் தயாரிக்கப்படுகிறது.

தனுஷின் மூன்றாவது இந்தி திரைப்படம்

இது தனுஷின் மூன்றாவது இந்தி திரைப்படம். இந்த படத்தில் பீகாரைச் சேர்ந்த ஒரு பெண்ணாக அக்‌ஷய் குமார் மற்றும் தனுஷ் ஆகியோரை காதலிப்பதாக ‘சாரா அலிகான்’ நடிக்கிறார்.

இசை

இர்ஷாத் காமிலின் பாடல்களுடன் ‘ஏ.ஆர். ரஹ்மான்’ இசையமைத்த இப்படத்தை ‘ஹிமான்ஷு சர்மா’ எழுதியுள்ளார்.

தனுஷின் தமிழ் படங்கள்

மேலும் இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும், ‘ஜகமே தந்திரம்’ படம் ஆகஸ்ட் மாதமும், இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் ‘கர்ணன்’ படம் ஜனவரி 2022- லும் வெளியாக உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -