தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தில் இருந்து முதல் பாடல் ரகிட ரகிட ரகிட தற்போது வெளிவந்து ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
ஜகமே தந்திரம் படத்தின் முதல் பாடல் ரீலீஸ்..!
ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஜகமே தந்திரம். தனுஷ் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த ஆண்டு மே 1ம் தேதி வெளியாகவிருந்த நிலையில் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தனுஷ் இரண்டு விதமான கெட்டப்பில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டன், சென்னை, மதுரை போன்ற பகுதிகளில் நடந்து முடிந்தது. தனுஷ் கிடா மீசையில் சுருளி எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார். பிளாஷ்பாக் காட்சியில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சஞ்சனா நட்ராஜன் நடித்துள்ளார்.
சென்னையில் நடிகர் ஷாம் திடீர் கைது..!
இந்நிலையில் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு முதல் பாடலான ரகிட ரகிட பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டனர். இன்று தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ரகிட ரகிட பாடல் லிரிக் வீடியோ இன்று காலை 9 மணிக்கு இந்த பாடல் அதிகாரப்பூர்வமாக சோனி மியூசிக் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.