Thursday, May 2, 2024

கோஸ்வாமி துளசிதாஸின்-‘துளசிதாஸ் ஜெயந்தி’

Must Read

இராமசரிதமானஸ் என்ற இதிகாசத்தை இயற்றிய கோஸ்வாமி துளசிதாஸின் புகழ் ஓங்க கொண்டாடப்படும் துளசிதாஸ் ஜெயந்தி, இவ்வருடம் ஜூலை 27 அன்று கொண்டாடப்படுகிறது.

கோஸ்வாமி துளசிதாஸின் இதிகாசம்

இராமசரிதமானஸ் என்பது இராமரின் மேல் தீவிர பக்தி கொண்ட, இந்தியாவை சேர்ந்த கோஸ்வாமி துளசிதாஸ் என்பவரால் 16ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட ஒரு இதிகாசம். இராமசரிதமானஸ் என்பதற்கு இராமரின் செயல்களை தொகுத்து எழுதப்பட்ட ஏரி என்று பொருளாகும்.

துளசிதாசர் ஆன வரலாறு

கோஸ்வாமி துளசிதாஸ் உத்திரப் பிரதேசத்தில் ஆத்மாராம் தாபே மற்றும் ஹுலசீபாய் என்ற பிராமணத் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர். இவர் பிறந்த சில நாட்களிலேயே தாயார் மரணமடைந்தார்.

காப்பீடு இருந்தால் கட்டணம் இல்லை – அரசு அதிரடி

பின், ஸ்வாமி ராமானந்தரின் வழித்தோன்றலான நரஹரி தாசர், துளசிதாஸை அயோத்திக்கு அழைத்து சென்று உபநயனம் செய்தார். ஸ்ரீராமனை நமஸ்கரித்தபோது, துளசிச் செடியிலிருந்த ஓர் இலை அவன் தலைமேல் விழுந்ததால், இவர் துளசிதாசர் என்று அழைக்கப்படுகிறார்.

துளசி ஜெயந்தி கொண்டாட்டம்

துளசிதாஸ் ஷ்ராவன மாதத்தில் பிறந்ததால், கிருஷ்ண பக்ஷவின் சப்தமியில் துளசி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

இவ்வாண்டு, ஜூலை 27 அன்று துளசிதாஸ் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. துளசிதாஸின் புகழை பறைசாற்றும் விதத்திலே, இந்நாள் கொண்டாடப்படுகிறது. மேலும், சாமானிய மக்கள் ராமாயணத்தை அறிந்து கொள்ள இவர் செய்த அயராத செயல்களை வெளிக்காட்டுகிறது இக்கொண்டாட்டம்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF கணக்கு வைத்திருப்பவர்களே., இவ்ளோ லட்சம் வரை காப்பீடு கிடைக்கும்? முழு விவரம் உள்ளே…

PF கணக்கில் பங்குகளை செலுத்தி வரும் ஊழியர்களின் நலன் கருதி பல்வேறு சலுகைகளை EPFO நிறுவனம் வழங்கி வருகிறது. அந்த வகையில் ஊழியர்கள் பணியில் இருக்கும்போது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -