ஒடிசா ரயில் விபத்து எதிரொலி: இந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி ஏற்பாடு., தொழிலதிபர் அதானி அறிவிப்பு!!!

0
ஒடிசா ரயில் விபத்து எதிரொலி: இந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி ஏற்பாடு., தொழிலதிபர் அதானி அறிவிப்பு!!!
ஒடிசா ரயில் விபத்து எதிரொலி: இந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி ஏற்பாடு., தொழிலதிபர் அதானி அறிவிப்பு!!!

ஒடிசா மாநிலத்தில் கடந்த ஜூன் 2ம் தேதி இரவு சென்னை நோக்கி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. அந்த வழியே அடுத்தடுத்து வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில்களும் மோதி விபத்துக்குள்ளானது பொதுமக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்டவர்களை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த விபத்தில் 900 பேருக்கும் மேல் படுகாயம் அடைந்துள்ளனர். 280 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் விபத்தில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு உதவ உள்ளதாக தொழிலதிபர் கவுதம் அதானி தெரிவித்துள்ளார்.

ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் விவரம்? உதயநிதி ஸ்டாலின் பகீர்!!!

இது தொடர்பாக அவர் கூறுகையில், “இந்த ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதும், குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலம் அமைத்து தருவதும் நமது அனைவரின் கடமையாகும். எனவே பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு இலவச பள்ளிக் கல்வியை அதானி குழுமம் கவனித்து கொள்ளும்.” என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here