கிரிக்கெட் வாழ்க்கையில் 13 ஆண்டை கடந்த அஸ்வின்…, உலகின் நம்பர் 1. வீரராக மாறி அசத்தல்!!

0
கிரிக்கெட் வாழ்க்கையில் 13 ஆண்டை கடந்த அஸ்வின்..., உலகின் நம்பர் 1. வீரராக மாறி அசத்தல்!!
கிரிக்கெட் வாழ்க்கையில் 13 ஆண்டை கடந்த அஸ்வின்..., உலகின் நம்பர் 1. வீரராக மாறி அசத்தல்!!

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை வெல்ல தயாராகி வருகிறது. வரும் ஜூன் 7ம் தேதி நடைபெற உள்ள இந்த போட்டிக்கு இன்னும் 2 நாட்கள் கூட முழுமையாக இல்லாத நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வெல்ல போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த போட்டியில், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு தனது சுழற்பந்து வீச்சின் மூலம் சிம்மசொப்பனமாக அஸ்வின் திகழ்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அரங்கில் இந்திய அணிக்காக இவர் களமிறங்கி, இன்றுடன் (5.6.2010) 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது டெஸ்டின் நம்பர் 1. பவுலராக உயர்ந்துள்ளார்.

ஒடிசா ரயில் விபத்து எதிரொலி: இந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி ஏற்பாடு., தொழிலதிபர் அதானி அறிவிப்பு!!!

இந்திய அணியின் வெற்றிக்கு பேட்டிங்கிலும் கை கொடுத்துள்ள இவர், உலக டெஸ்டின் நம்பர் 2. ஆல்ரவுண்டராக திகழ்கிறார். இதுவரை, இவர் 92 டெஸ்டில் 474 விக்கெட்டுகள் மற்றும் 3129 ரன்கள், 113 ஒருநாள் போட்டியில் 151 விக்கெட்டுகள் மற்றும் 707 ரன்கள், 65 டி20 போட்டிகளில் 72 விக்கெட்டுகள் மற்றும் 184 ரன்கள் என அனைத்து வடிவிலும் சிறந்த ஆல் ரவுண்டராக கடந்த 13 ஆண்டுகளில் பதிவு செய்துள்ளார். எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் தனது சிறந்த பங்களிப்பை அளிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here