50 ஓவர் உலக கோப்பைக்கான அட்டவணை வெளியீடு…, 2 குரூப்களாக பிரிக்கப்பட்ட அணிகள்…, முழு விவரம் உள்ளே!!

0
50 ஓவர் உலக கோப்பைக்கான அட்டவணை வெளியீடு..., 2 குரூப்களாக பிரிக்கப்பட்ட அணிகள்..., முழு விவரம் உள்ளே!!
50 ஓவர் உலக கோப்பைக்கான அட்டவணை வெளியீடு..., 2 குரூப்களாக பிரிக்கப்பட்ட அணிகள்..., முழு விவரம் உள்ளே!!

ஐசிசி சார்பாக இந்தியாவில், 50 ஓவர் உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதி முதல் 10 அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது. இந்த தொடரில், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பங்களாதேஷ், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளனர். மீதமுள்ள 2 இடத்தை பிடிப்பதற்கான தகுதி போட்டியில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட 10 அணிகள் மோத உள்ளன. இந்த தகுதி போட்டிகளானது, வரும் ஜூன் 18ம் தேதி முதல் ஜூலை 9ம் தேதி வரை ஜிம்பாப்வே நடைபெற இருக்கிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதில், 10 அணிகள் 2 குரூப்களின் கீழ் தலா 5 அணிகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகள் போல் மோத உள்ளன. இதன் முடிவில், இரு குருப்களிலும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெறும். இந்த சூப்பர் 6 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுக்கு எதிராக தலா ஒரு முறை மோதும். இந்த போட்டிகளில் முடிவில் அதிக புள்ளிகளை பெற்று முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள், 50 ஓவர் உலகக்கோப்பைக்கு 8 அணிகளுடன் 9 மற்றும் 10 வது அணியாக இணையும்.

போடுறா வெடிய., இன்னும் IPL கூட முடியல., அதுக்குள்ள அடுத்த போட்டியா., ரவி சாஸ்திரி கொடுத்த ஹின்ட் !!!

குரூப் A:
வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, நெதர்லாந்து, நேபாளம் மற்றும் USA.

குரூப் B:
இலங்கை, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஓமன் மற்றும் UAE.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here