நடப்பு ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஒவ்வொரு அணிகளும் தலா 8 போட்டிகளில் விளையாடி இருக்கும் நிலையில் இன்று (மே 2) நடக்கும் 44 ஆவது போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் துவங்க உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த போட்டியில், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணி வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதுவரை சுமார் 8 போட்டிகளில் விளையாடி இருக்கும் குஜராத் அணி சுமார் 6 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை வகிக்கிறது. அதே போல, 8 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்ற டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.
குழந்தை தொழிலாளர்களை மீட்பதில் தமிழகம் 2ஆம் இடம்.., அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம் !!!
இதற்கிடையில், இன்று நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி பெற்று தனது வீழ்ச்சியில் இருந்து மீளுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இன்று நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலாவது பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த போட்டி சரியாக 7.30 மணியளவில் ஜியோ தளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது.