குழந்தை தொழிலாளர்களை மீட்பதில் தமிழகம் 2ஆம் இடம்.., அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம் !!!

0
குழந்தை தொழிலாளர்களை மீட்பதில் தமிழகம் 2ஆம் இடம்.., அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம் !!!
குழந்தை தொழிலாளர்களை மீட்பதில் தமிழகம் 2ஆம் இடம்.., அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம் !!!

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. அப்போது பள்ளிக்கு சென்ற அனைத்து மாணவர்களும் குடும்ப வறுமை காரணமாக வேலைக்கு செல்ல ஆரம்பித்தனர்.இதனால் நாட்டில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்பினர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் தான் சென்னையில் உள்ள சாந்தோம் செயின்ட் பீட்ஸ் நூற்றாண்டு கலையரங்கில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பை வலியுறுத்தி 500 இளம் இசைக் கலைஞர்கள் கீபோர்டு வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது மிகப்பெரிய குற்றம். குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் வேலைக்கு செல்வதை யார் பார்த்தாலும் உடனடியாக தொழிலாளர் நலத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

தமிழக மக்களே., இந்தியாவில் தலைசிறந்த இந்த மருத்துவமனையில் சிகிச்சை முற்றிலும் இலவசம்??? ஜாக்பாட் அறிவிப்பு!!!

இதன் மூலம் குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள். மேலும் இந்தியாவில் கொரோனா காலகட்டத்தில் 58,289 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அதே போன்று தமிழகத்திலும் 2,887 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். இதனால் தமிழகம் குழந்தை தொழிலாளர்கள் மீட்பதில் 2-வது இடத்தில் இருக்கிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here