மும்பையை தளமாகக் கொண்ட பிரபல விமான சேவை நிறுவனம் கோ பர்ஸ்ட். இந்த நிறுவனம் வாடியா குரூப் நிறுவனத்தால் இயக்கப்பட்டு வருகிறது. சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த விமான நிறுவனம் தற்போது வருவாய் இழப்பு, எஞ்சின் தேவை என பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும், விமானங்களை சரியாக இயக்க முடியாததால் இந்நிறுவனம் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீட்டை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சூழலில் மே மாதம் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் அனைத்து விதமான விமான சேவைகளையும் ரத்து செய்வதாக கோ பர்ஸ்ட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
IPL 2023: டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு….,தோல்வியில் இருந்து மீளுமா?
அதாவது, நிதி நெருக்கடிக்குள் சிக்கி இருக்கும் கோ பர்ஸ்ட் நிறுவனம் சேவைகளை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்திடம் தெரிவித்துள்ளது. இது தவிர தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் திவாலுக்கான மனுவையும் இந்நிறுவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.