மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி – சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு..!

0
பொதுமக்களுக்கு குட்நியூஸ் சொன்ன அரசு - சமையல் சிலிண்டருக்கான மானியம் ரூ.200 ஆக நிர்ணயம்!!
சமையல் கேஸ் பயன்படுத்துவோர் கவனத்திற்கு - மத்திய அரசு கொடுத்த ஷாக்! பொதுமக்கள் அதிர்ச்சி!!

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் தங்கம் என அனைத்தின் விலையும் அதிகரித்து வரும் நிலையில், தற்போது மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் உயர்த்தப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

சமையல் எரிவாயு:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக 3 மாத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் வருமானம் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர். தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ள நிலையில் அதிகரித்து வரும் விலைவாசியால் மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இந்தியாவில் ஒரு வருடத்திற்கு 12 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ஒரு குடும்பத்திற்கு மானியத்துடன் வழங்கப்படுகிறது. இதற்கு மேல் தேவையென்றால் மானியமில்லாமல் சந்தை விலைக்கு விற்கப்படுகிறது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Gas Cylinder
Gas Cylinder

”சத்தியமா விடவே கூடாது” – சாத்தான்குளம் சம்பவத்திற்கு ரஜினிகாந்த் ட்வீட்..!

அந்நிய செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் சர்வதேச சந்தை நிலவரத்தின் அடிப்படையில் காஸ் சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்படுகிறது. இந்நிலையில் ஏற்கனவே இரண்டு முறை விலை உயர்த்தப்பட்ட நிலையில் இன்று மானியமில்லாத காஸ் சிலிண்டர் விலை 4 ரூபாய் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து உள்ளன. சென்னையில் ஜூலை 1 முதல் புதிய விலையாக ரூ. 610.50 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் கவலை அடைந்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here