இந்தியாவில் டிக் டாக் செயலி மீண்டும் வர வாய்ப்பு..?

0

டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டது பலருக்கு அதிர்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்திய அரசு தடை செய்யப்பட்ட இந்த செயலிக்கு மீண்டும் செயல்பட ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீன செயலிகள் முடக்கம்..!

கடந்த ஜூன் 15ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த இந்திய – சீன போரின் விளைவாக இந்திய அரசு டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகள் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

india ban 59 chines app
india ban 59 chines app

செயலில் நடத்தி வரும் தனியார் நிறுவனம் எந்த வகையிலும் தனிநபர் தகவல்களை திருடவில்லை என உறுதி அளிக்கும் வகையில் இந்திய அரசுக்கு விளக்கம் கொடுக்கலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கப்படும்பட்சத்தில் குறிப்பிட்ட செயலி மீண்டும் இந்தியாவில் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளது. தற்போது ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோர் மற்றும் ஐஓஎஸ் ஆகிய தளங்களில் இந்த 59 செய்திகள் நீக்கப்பட்டுள்ளன.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

டிக் டொக் செயலி மீண்டும் செயல்பட வாய்ப்பு..!

ஆனால் ஏற்கனவே தரவிறக்கம் செய்து பயன்படுத்திவரும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம் எனவும் ஆனால் விரைவில் அதுவும் முடக்கப்பட வாய்ப்புள்ளது.

டிக் டாக் மறுக்கப்பட்டதை தொடர்ந்து அதன் இந்தியா தலைவர் கூறியதாவது, தனிநபர் தகவல்களை டிக்டாக் செயலி என்றும் திருடும் செயலில் ஈடுபட்டது இல்லை என விளக்கம் அளித்துள்ளார். கிட்டத்தட்ட முப்பது லட்சம் இந்திய வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது டிக்டாக் இவற்றில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் தற்போது இந்திய அரசு தடை செய்யப்பட்ட இந்த செயலிக்கு மீண்டும் செயல்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here