என்.எல்.சி பாய்லர் வெடித்த விபத்தில் 6 பேர் உயிரிழப்பு – முதல்வர் நிவாரண உதவி அறிவிப்பு..!

0
Accident
Accident

நெய்வேலி என்.எல்.சி யில் 2வது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்த குடுப்பதிற்கு நிவாரணம் உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

நெய்வேலி அனல்மின் நிலையம் விபத்து..!

கடலூர் மாவட்டம் நெய்வேலியின் 2வது அனல்மின் நிலையத்தில் 5வது யூனிட்டில் உள்ள பாய்லர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஊழியர்களை மீட்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. 17 பேர் காயமடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 5 பேரை காணவில்லை எனவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்கள் நெய்வேலி என்.எல்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா 3 லட்ச ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு 1 லட்ச ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரண உதவி தொகை வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

EPS
EPS

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

தொடர் விபத்து..!

என்.எல்.சி நிறுவனத்தில் பாதுகாப்பு பணி என்பது மெத்தமனாக இருப்பதும், அதிகளவு வேலை செய்யப்படுகிறது என்பதும் ஊழியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தீயணைப்பு காரணமாக அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதேபோல் கடந்த மே மாதம் இதே அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீவிபத்தில் 5 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here