நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படம் குறித்து இணையத்தில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
ஜெயிலர் திரைப்படம்:
தென்னிந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரஜினி ஜெயிலர் வார்டனாக நடித்து வரும் இப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் இப்படத்தின் ஷூட்டிங் 80 சதவீதம் முடிவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் படக்குழுவினர் தீவிரமாக இருந்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
சமீபத்தில் இப்படத்தில் மோகன்லால், சுனில் ஆகியோர் நடிக்க இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகின. இந்த நிலையில் இந்த மாபெரும் கூட்டணியில் மீண்டும் ஒரு நடிகர் இணைய இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தில் அவருக்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் நடிக்க இருப்பதாக கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
தரமான சம்பவங்களுடன் வெளியான தளபதி 67 அப்டேட்.., படக்குழுவினர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!!
மேலும் இந்த செய்தி உண்மையெனில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என 5 மொழி நடிகர்கள் நடிக்கும் ஒரே திரைப்படம் ஜெயிலர் என்ற பெருமையை பெறும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி நடிகர் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.