நடிகை வேதிகா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளார்.
நடிகை வேதிகா:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முனி என்ற திகில் படத்தில் நடித்து பட்டிதொட்டியெல்லாம் ரீச்சானவர் தான் நடிகை வேதிகா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். தமிழில் இவர் கடைசியாக நடித்த காவியத்தலைவன், முனி 3 திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்றது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனால் அவருடைய மார்க்கெட் சரிய தொடங்கிய நிலையில், ஓரிரு படங்களில் தற்போது கமிட்டாகியுள்ளார். அந்த வகையில் தற்போது ஜங்கிலி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இருப்பினும் பட வாய்ப்புகள் இவரை தேடி வரவேண்டும் என்று பலவிதங்களில் போட்டோ ஷூட் நடத்தி அதை தனது இணையதள பக்கத்தில் வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை வேதிகா குறித்து இணையத்தில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நடிகை வேதிகா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் புதிதாக எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், இது நம்ம வேதிகாவா என்று வாயை பிளந்து பார்த்து வருகின்றனர். தற்போது அந்த போட்டோக்கள் இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.