நடிகர் விஜய், முன்னணி சினிமா காமெடி பிரபலம் உள்ளிட்டோருடன் சேர்ந்து எடுத்த லேட்டஸ்ட் போட்டோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் போட்டோ:
நடிகர் விஜய் தனது வாரிசு படத்திற்கு பின், லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்திற்கு தீவிரமாக தயாராகி வருகிறார். இந்த படத்தில், நடிகர் சஞ்சய் தத் விஜய்க்கு வில்லனாக நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. ஹீரோயினாக நடிகை திரிஷாவும், முக்கிய கேரக்டரில் பல நட்சத்திர பிரபலங்கள் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்பட்டது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
விரைவில் இந்த படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் குறித்து லேட்டஸ்ட் போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. வாரிசு படத்தில் தான் இருந்த கெட்டப்பை மொத்தமாக மாற்றி, விஜய் இந்த போட்டோவில் போஸ் கொடுக்கிறார்.
இதை வைத்து பார்க்கும்போது தளபதி 67 படத்தில் விஜய்யின் புது கெட்டப் இதுவாகத்தான் இருக்குமோ? என அவரது ரசிகர்கள் சந்தேகித்து வருகின்றனர். தற்போது இந்த போட்டோ விஜய் ரசிகர்களிடையே பெரிய அளவில் வைரலாகி வருகிறது.