விஜய் டிவி பல்வேறு நிகழ்ச்சிகளையும் சீரியல்களையும் ஒளிபரப்பி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் விஜய் டிவிக்கு என்றே ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர், நீயா நானா, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் TRB ரேட்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகவும் பிரபலமான காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் 3 சீசன்கள் வெற்றிகரமாக முடித்து உள்ளது. இதில் வெங்கடேஷ் பட், செஃப் தாமு ஆகியோர் நடுவர்களாக இருந்து வருகின்றனர். மேலும் புகழ்பெற்ற சிவாங்கி, மணிமேகலை, பாலா, சுனிதா போன்ற கோமாளிகள் கடந்த சீசன்களில் காமெடியில் கலக்கி வந்தனர்.
இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 4 குறித்த ப்ரோமோ ஒன்று வந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த ப்ரோமோவில் புது புது கோமாளிகளான சிங்கப்பூர் தீபன், ஜி.பி.முத்து போன்றவர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில் EVP செட்டில் தற்போது குக் வித் கோமாளி சீசன் 4 ஷூட்டிங் தொடங்கிய புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.