நியூசிலாந்துக்கு எதிராக ஹர்திக் பாண்டியா விக்கெட்…, சர்ச்சையை கிளப்பிய நடுவர் தீர்ப்பு!!

0
நியூசிலாந்துக்கு எதிராக ஹர்திக் பாண்டியா விக்கெட்..., சர்ச்சையை கிளப்பிய நடுவர் தீர்ப்பு!!
நியூசிலாந்துக்கு எதிராக ஹர்திக் பாண்டியா விக்கெட்..., சர்ச்சையை கிளப்பிய நடுவர் தீர்ப்பு!!

இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, நியூசிலாந்து அணிக்கு எதிராக தனது விக்கெட்டை பறி கொடுத்தது பெரும் சர்ச்சையாகி வருகிறது.

ஹர்திக் பாண்டியா:

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ராஜீவ் காந்தி மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த போட்டியில், முதலில் பேட் செய்த இந்திய அணியில், முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா (34), விராட் கோலி (8), இஷான் கிஷன் (5) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். ஒரு கட்டத்தில், சுப்மன் கில்லும், ஹர்திக் பாண்டியாவும் இணைந்து 5 வது விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்து அதிரடியாக விளையாடினர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இவர்கள் இருவரும் இணைந்து, இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்துவார்கள் என்றிருந்த நிலையில், ஹர்திக் பாண்டியா 40 வது ஓவரில் நியூசிலாந்தின் டேரில் மிட்செல் பந்தில் போல்டானார். இவர் போல்டானதை ரிப்ளே செய்து பார்த்ததில், ஸ்டம்பிற்கு மேலாக சென்ற பந்தை, விக்கெட் கீப்பர் டாம் லாதம் பிடிக்கும் போது, இவரது கையுறை பட்டு, ஸ்டம்பின் மேல் உள்ள “பைல்ஸ்” விழுந்தது போல் உள்ளது.

“இதுலயும் சிறப்பாக செயல்பட்டால் தான் நாம் வெற்றி பெற்றதா அர்த்தம்”…, நியூசிலாந்து போட்டிக்கு பின் ரோஹித் சர்மா!!

ஆனால், மூன்றாவது அம்பயர் ஹர்திக் பாண்டியாவுக்கு அவுட் என தீர்ப்பு வழங்கி உள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த போட்டியில், இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டானது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here