23 வருடங்களுக்கு பிறகு கமலுடன் கைகோர்க்கும் சூப்பர் ஸ்டார்.., “KH 234” படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியீடு!!

0
23 வருடங்களுக்கு பிறகு கமலுடன் கைகோர்க்கும் சூப்பர் ஸ்டார்..,
23 வருடங்களுக்கு பிறகு கமலுடன் கைகோர்க்கும் சூப்பர் ஸ்டார்.., "KH 234" படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியீடு!!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கும் KH 234 படத்தை குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

KH234 திரைப்படம்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் கதைக்காக உடலை வருத்தி மக்களை என்டர்டெயின்மென்ட் செய்பவர் தான் உலகநாயகன் கமல்ஹாசன். அதுமட்டுமின்றி ஒரே படத்தில் பல கெட்டப் போட்டு பல குரல்களில் பேசி அசத்தியவர் தான் கமல். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான விக்ரம் திரைப்படம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது. இதனை தொடர்ந்து ஷங்கர் படைப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கூடிய விரைவில் திரைக்கு வரும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதன் பின்னர் 33 வருடங்களுக்கு பிறகு கமலை வைத்து KH 234 திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்க இருக்கிறார். நீண்ட வருடங்களுக்கு பின் ஒன்று சேரும் இந்த இரு ஜாம்பவான்களின் கூட்டணியை பார்க்க ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். இந்நிலையில் இப்படத்தை குறித்து புதிதாக ஒரு அப்டேட் இணையத்தில் வெளியாகியுள்ளது.

விவாகரத்திற்கு பிறகு வாடும் ஐஸ்வர்யாவிற்கு ரஜினிகாந்த் செய்த செயல்.., கடைசில இப்படி இறங்கிடீங்களே!!

அதாவது மணிரத்னம் படைப்பில் கமல் நடிக்கும் KH234 படத்தில் ஏழு மாநிலங்களை சேர்ந்த முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானும் இருப்பதாக சொல்லப்படுகிறது. பான் இந்திய படமாக உருவாக இருப்பதால் மணிரத்னம் பெரிய சம்பவத்தை செய்ய போகிறார் என்று அப்பட்டமாக தெரிகிறது. மேலும் ஹேராம் படத்தில் கமல் மற்றும் ஷாருக்கான் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here