நடிகை லட்சுமி மேனன் நடிக்கும் புது படம் குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
நடிகை லட்சுமி மேனன்:
தமிழ் சினிமாவில் சசிகுமார் நடித்த சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் சினித்துறையில் கால் தடம் பதித்தவர் தான் நடிகை லட்சுமி மேனன். இவர் நடித்த முதல் படத்திலேயே பாவாடை தாவணியில் தோன்றி, தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து சூப்பர் ஹிட் கொடுத்தார். லட்சுமி மேனன். அதுமட்டுமின்றி இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும் பெற்றார். இதனை தொடர்ந்து கும்கி, பாண்டியநாடு, ஜிகர்தண்டா, மஞ்சப்பை என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக மாறினார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதன் பின்னர் பல புது முக நடிகைகள் வருகைக்கு பின்னர் டோட்டலாக இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. தற்போது நடிகை லட்சுமி மேனன் சினிமாவில் செகண்ட் இன்னிங்சை தொடங்கியுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
விவாகரத்திற்கு பிறகு வாடும் ஐஸ்வர்யாவிற்கு ரஜினிகாந்த் செய்த செயல்.., கடைசில இப்படி இறங்கிடீங்களே!!
அதாவது நடிகர் ஆதி நடிப்பில் உருவாக இருக்கும் சப்தம் படத்தில் லட்சுமி மேனன் நடிக்க இருக்கிறார். இசையமைப்பாளர் தமன் இசையமைக்கும் இப்படத்தில் 7G சிவா தயாரிக்க இருக்கிறார். மேலும் இப்படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.