சந்தானத்தின் முடிவை கையில் எடுத்த யோகி பாபு., உணர்வு பூர்வமான படத்தில் நாயகனாக களமிறங்குகிறாரா!!

0
சந்தானத்தின் முடிவை கையில் எடுத்த யோகி பாபு., உணர்வு பூர்வமான படத்தில் நாயகனாக களமிறங்குகிறாரா!!
சந்தானத்தின் முடிவை கையில் எடுத்த யோகி பாபு., உணர்வு பூர்வமான படத்தில் நாயகனாக களமிறங்குகிறாரா!!

தென்னிந்திய சினிமாவில் எக்கசக்க படங்களில் நகைச்சுவை நாயகனாக நடித்து மக்கள் கவனத்தை பெற்றவர் தான் யோகி பாபு. மேலும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் ஜோடியாக கோலமாவு கோகிலா படத்தில் நடித்து சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதையும் பெற்றுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் தற்போது இளைய தளபதி விஜயுடன் சேர்ந்து வாரிசு படத்தில் நடித்து அசத்தி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இந்நிலையில் இவர் பொம்மை நாயகி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான முதல் சிங்கிள் சாங் வெளியாகி மக்களிடம் அதிக எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

இந்நிலையில் இதன் 2 வது பாடல் ஜனவரி 20 ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கபட்டுள்ளது. மேலும் இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பொதுவாக இவர் நடிக்கும் படங்களில் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் இவரின் இந்த படம் சமூக உணர்வுகளை வெளிப்படுத்தும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here