திருமண கோலத்தில் ரக்ஷிதா.., தினேஷை விட்டு பிரியாதீங்க ப்ளீஸ்.., கண்கலங்கிய ரசிகர்கள்!!

0

சின்னத்திரை நடிகை ரக்ஷிதா மஹாலக்ஷ்மி இப்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் புகழை பெற்று வருகிறார். ஆரம்பத்திலிருந்து 90 வது நாள் வரை ஒரே மாதிரியான குணத்தை காட்டி அனைவரும் நெஞ்சிலும் இடம் பிடித்தார். பலரும் நடித்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்லியும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவும் இல்லை.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்பொழுது வீட்டை விட்டு வெளியேறி அவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அவரின் வரவேற்பே வேற லெவலில் இருந்தது. இப்படி இருக்க ரக்ஷிதா குறித்த சில வதந்திகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அது வதந்தியா?? உண்மையா?? என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. அதாவது இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டார் என்று செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.

ஆனால் வீட்டுக்குள் இருந்த வரைக்கும் தினேஷ் ரக்ஷிதாவிற்கு பக்க பலமாக இருந்தார். அவருக்கு சப்போர்ட் செய்யும் படி பல போஸ்ட்களையும் வெளியிட்டு கொண்டிருந்தார். எப்படியும் இது நிரந்தர பிரிவு கிடையாது என்றும் கூறியிருந்தார் தினேஷ். இப்படி இருக்க இப்பொழுது ரசிகர்களால் ஒரு புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

அதாவது இருவரும் புகைப்படத்தையும் எடிட் செய்து வெளியிட்டுள்ளனர். அதற்கு பலரும் கமெண்ட்களை தெறிக்க விட்டு வருகின்றனர். அதாவது இரண்டு பேருமே சேர்ந்து வாழுங்க உங்க ரெண்டு பேரும் ஜோடி சூப்பர், பிரியாதீங்க என்று பலவாறு கமெண்ட் செய்து வருகின்றன.மேலும் இவர்களின் திருமண புகைப்படம் வேறு இணையத்தில் வைரலாகி வருவதால் ஜோடி பொருத்தம் சூப்பர் என்றும் பாராட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here