16 வருடங்களுக்கு பின் ரீ என்ட்ரி கொடுத்த 90ஸ் கனவு நாயகி., அடேங்கப்பா.., இப்போ வரைக்கும் அப்படியே இருக்கீங்களே!!

0
16 வருடங்களுக்கு பின் ரீ என்ட்ரி கொடுத்த 90ஸ் கனவு நாயகி., அடேங்கப்பா.., இப்போ வரைக்கும் அப்படியே இருக்கீங்களே!!

16 வருடங்களாக நடிப்பை விட்டு தள்ளி இருந்த பிரபல நடிகை லைலா தற்போது கார்த்தி நடிப்பில் வெளியாக இருக்கும் சர்தார் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

நடிகை லைலா:

நடிகர் கார்த்தி நடிப்பில் இன்று வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூல் சாதனை படைத்து வருகிறது. இதனை தொடர்ந்து அவர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் என்ற படத்தில் நடித்துள்ளார் . இப்படத்தில் ஆறு வேடங்களில் கார்த்தி நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரசிகர் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் இந்த படம் வருகிற தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான சர்தார் டிரைலர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது.

இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல முன்னாள் நடிகை லைலா நடித்துள்ளார். இவர் அர்ஜுன் நடிப்பில் 2004ம் ஆண்டு வெளிவந்த ஜெய்சூர்யா படத்தில் கடைசியாக நடித்தார். அதன் பின்னர் கிட்டத்தட்ட 16 வருடங்களாக நடிப்பதில் இருந்து விலகி இருந்த நடிகை லைலா தற்போது சர்தார் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here