10 வருடங்கள் முன்பே பொன்னியின் செல்வன் படம் குறித்து பேசிய ராஜமௌலி.., என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்களே!!

0
10 வருடங்கள் முன்பே பொன்னியின் செல்வம் படம் குறித்து பேசிய ராஜமௌலி.., என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்களே!!
10 வருடங்கள் முன்பே பொன்னியின் செல்வம் படம் குறித்து பேசிய ராஜமௌலி.., என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்களே!!

பொன்னியின் செல்வன் திரைப்படம், திரையரங்குகளில் பட்டையை கிளப்பி வரும் நிலையில் இயக்குனர் ராஜமௌலி 2011ல் இந்த படம் குறித்து பதிவிட்ட ஒரு ட்விட் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

வைரலாகும் பதிவு:

10ம் நூற்றாண்டு கதை, சோழர்களின் ஆட்சி, நந்தினியின் சதி, பதவி ஆசை, பாண்டியர்களின் பழி வாங்கும் முயற்சி, கரிகாலனின் கொலையை நோக்கி உண்மையும், கற்பனையும் கலந்து ‘பொன்னியின் செல்வன்’ என்ற பெயரில் கதையை எழுதியிருந்தார் கல்கி. அவற்றை விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பிரம்மாண்ட நட்சத்திர பட்டாளத்தை கொண்டு படமாக இயக்கி முடித்தார் மணிரத்னம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த திரைப்படம் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தை பார்த்த பார்வையாளர்கள் பலரும், பொன்னியின் செல்வன் படத்தை தெலுங்கு படமான பாகுபலி படத்துடன் compare செய்து சில கருத்துக்களை சொல்லி வருகின்றனர். அண்மையில் இயக்குனர் மணிரத்னம், ஒரு பேட்டியில் பொன்னியின் செல்வன் படம், ஒரு யதார்த்தமான வரலாற்று படைப்பு, மேலும் பாகுபலி திரைப்படம் போல கற்பனையான உலகம், சூப்பர் ஹீரோ கதை இல்லை என குறிப்பிட்டு இருந்தார்.

மதுரையில் நாளை ‘இந்த’ பகுதிகளில் பவர் கட்.,, மக்களே உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க.

இந்நிலையில் கடந்த 10 (2011) வருடங்களுக்கு முன்பு, ட்விட்டரில் ஒருவர் ‘ஹாய் ராஜமௌலி.முடிந்தால் கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்” மற்றும் “சிவாமியின் சபாதம்” என்ற தமிழ் நாவலைப் படித்துப் பாருங்கள்’ என்று பதிவிட்டுள்ளார். அதற்கு அவர், ‘பொன்னியின் செல்வன் படியுங்கள் அற்புதமான நாவல் நாடகம் மற்றும் பாத்திரங்கள்’ என்று ரிப்ளை செய்துள்ளார். அந்த ட்விட் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here