தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ்.., இனி ரேகை தேவையில்லை., அமலுக்கு வரும் புதிய முறை!!

0
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்.., பொங்கலுக்கு இதெல்லாம் கிடைப்பது சிக்கல் தான்!!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்.., பொங்கலுக்கு இதெல்லாம் கிடைப்பது சிக்கல் தான்!!

தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் வழங்கும் மின்னணு பதிவேட்டில் அடிக்கடி கோளாறு ஏற்படுவதால், அதை தவிர்க்கும் வண்ணம் புதிய முறை அமலுக்கு வர உள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

ரேஷன் கடை:

தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ், ரேஷன் அட்டைதாரர்கள் குறைந்த விலையில் உணவு பொருட்களை பெற்று வருகின்றனர். இது மட்டுமல்லாமல், இலவசமாக உணவு தானியங்களும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் கடைகளில் தொடர்ந்து மோசடிகள் நடந்து வருவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

இந்த மோசடிகளை தடுப்பதற்கு என ரேஷன் அட்டைதாரர்களுக்கு பயோமெட்ரிக் கருவி மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் சில நேரங்களில் ஏற்படும் பயோமெட்ரிக் இயந்திர கோளாறு காரணமாக பொருட்கள் விநியோகம் செய்வதில் பெரும் சிக்கல் ஏற்படுவதாக, ரேஷன் கடை பணியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் அவற்றை தவிர்க்கும் விதமாக வரும் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் கருவிழி மூலம் ரேஷன் பொருட்கள் அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.. இந்த அறிவிப்பு ரேஷன் அட்டைதாரர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here