இந்திய அணி உலக கோப்பையில் வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு முன்னதாக T20 போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும் என கம்பீர் கூறியுள்ளார்.
கவுதம் கம்பீர்
T20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் தனது சொந்த மண்ணில் 20 ஓவர் தொடருக்கான போட்டியில் மோத உள்ளனர். இதற்காக இரு அணிகளும் தற்போது தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த போட்டிகள் மொஹாலி, நாக்பூர், ஹைதராபாத் ஆகிய மூன்று இடங்களில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மைதானங்கள் அதிக ரன் குவிப்புக்கு ஏதுவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராட வேண்டிய நெருக்கடியில் உள்ளது. இந்நிலையில் கௌதம் கம்பீர் இந்த ஆண்டு உலக கோப்பை வெல்வது குறித்து சில தகவல்களை கூறியுள்ளார். அதாவது தோனி தலைமையிலான இந்திய அணி கடந்த 2007 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பட்டத்தை வென்றது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதேபோன்று 2011 ஆம் ஆண்டு மீண்டும் காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றார்கள். இந்நிலையில் இதே போன்று T20 உலக கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என கம்பீர் கூறியுள்ளார். மேலும் தோனி அணியை வழிநடத்தியது போலவே, ரோகித் சர்மாவும் வழி நடத்தினால் கண்டிப்பாக உலக கோப்பையை கைப்பற்றலாம் என்றும் கூறியுள்ளார்.