சூர்யாவின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்ததே இந்த வில்லன் நடிகர் தானா?? வெளியான உண்மை சம்பவம்!!

0
சூர்யாவின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்ததே இந்த வில்லன் நடிகர் தானா?? வெளியான உண்மை சம்பவம்!!
சூர்யாவின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்ததே இந்த வில்லன் நடிகர் தானா?? வெளியான உண்மை சம்பவம்!!

நடிகர் சூர்யாவின் சினிமா வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற பிரபலம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா:

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் சூர்யா. ஆரம்ப காலகட்டத்தில் இவரது படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் மட்டுமே வந்து கொண்டிருந்தது. ஆனால் சூர்யா எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து முயற்சி செய்ததால், தற்போது முன்னணி நடிகராக சினிமாவில் ஜொலிக்கிறார். நடிகர் சூர்யா இந்த இடத்திற்கு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் பிரபல வில்லன் நடிகர் ரகுவரன் தான். சூர்யாவுடன் ரகுவரன் நேருக்கு நேர் மற்றும் உயிரிலே கலந்தது போன்ற படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கத்து.

இந்த படங்கள் வெளிவந்த சமயத்தில் சூர்யாவிற்கு நெகடிவான கமெண்ட் வந்து கொண்டிருந்தது. அப்பொழுது தான் படப்பிடிப்பு போது இருவரும் சேர்ந்து ரயிலில் பயணித்துள்ளனர். அந்த நேரத்தில் நடிகர் சூர்யா நன்றாக உறங்கி கொண்டிருந்த போது, ரகுவரன் தட்டி எழுப்பியுள்ளார்.இதனை தொடர்ந்து எழுந்த சூர்யாவிடம், “உனக்கு என்ன தூக்கம் வருதா, ஒரு வெற்றிப் படம் கூட கொடுக்க முடியவில்லை உன்னால், எப்படி உறக்கம் வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

வெற்றி கனியை ருசித்த பிறகு தான் இரவில் நன்றாக தூக்கம் வரும் என்று ரகுவரன் கூறியுள்ளார். இந்த சொற்களை வேத வாக்காக எடுத்து கொண்டு நடிகர் சூர்யா அயராமல் உழைத்து தன் மீது உள்ள நெகட்டிவ் விமர்சனங்களை அறுத்தெறிந்தார். தற்போது தேசிய விருதுகளை பெறும் அளவுக்கு உயர்ந்துள்ளார் நடிகர் சூர்யா. இந்நிலையில் இவரது நடிப்பில் வெளியாக இருக்கும் வாடி வாசல், வணங்கான் போன்ற படங்களுக்கு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here