இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் படத்தில் அசால்ட்டாக நடித்து அனைவரையும் கட்டி போட்டவர் அதிதி. இவர் வெற்றி இயக்குனர் சங்கரின் மகள் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான்.
இருப்பினும் வாரிசு நடிகை என்ற எந்த ஒரு பகட்டும் இல்லாமல் ஜாலியான பேச்சுடன் ரசிகர்களை கவர்ந்துள்ளார். நம்மில் பலரும் விருமன் தான் அதிதியின் முதல் படம் என்று நினைத்திருப்போம். ஆனால் அது இல்லை. அதற்கு முன்பே இவர் ஒரு படத்தில் நடித்துள்ளார். இதை இவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது அதிதியின் தந்தை சங்கர் இயக்கிய சிவாஜி படத்தின் வாஜி வாஜி பாடலின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சங்கர் அதிதியை கூட்டி சென்றுள்ளார். அப்பொழுது ரஜினி மேல் குழந்தைகள் பூ தூவுவது போல காட்சிகள் இடம் பெரும். அதில் அதிதியும் ஒரு ஆளாக இருந்துள்ளார். இது அவர் சொன்னதிற்கு பிறகு தான் ரசிகர்களுக்கு அதிதி அதற்கு முன்பே சினிமாவில் தோன்றியுள்ளாரா என்ற வியப்பை ஏற்படுத்தியுள்ளது.