முன்னாள் கணவர் பற்றி முதல் முறையாக வாய் திறந்த மகாலட்சுமி – அம்பலமாகிய முக்கிய உண்மை!!

0

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சீரியல் நடிகை மகாலட்சுமி, தனது முதல் கணவர் குறித்து முதல் முறையாக மௌனம் கலைத்துள்ளார்.

முதல் கணவர்:

தொகுப்பாளினி மற்றும் சின்னத்திரை நடிகை என டாப் கியரில் போய் கொண்டிருக்கும் நடிகை மகாலட்சுமி, பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரை 2வது திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி சச்சின் என்று 6 வயது மகன் உள்ளார். அதுமட்டுமில்லாமல், இவர் 2வது திருமணம் செய்த ரவீந்தரும் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஜோடியாக வலம் வரும் அவர்கள், சமீபத்தில் தனியார் சேனலுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, மகாலட்சுமி தன் முதல் கணவர் அனில் குறித்து பேசினார். சில ஆண்டுகளுக்கு முன் அனில் என்பவரை திருமணம் செய்து கொண்ட நான், கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டேன் என குறிப்பிட்டார்.

அதுமட்டுமில்லாமல், என் முன்னாள் கணவர், 1 வருடத்திற்கு முன்பே திருமணம் செய்துவிட்டார் என்றும், அவர் இப்போது தனக்கான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என்றும் குறிப்பிட்டார். என் மகனைப் புரிந்து கொண்ட, நல்ல மனிதரை திருமணம் செய்ய நினைத்த தனக்கு ரவீந்தர் கிடைத்துவிட்டார் என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here