Century அடிச்சது மட்டும் சாதனை இல்ல.. இன்னொன்னும் இருக்கு – விராட் கோலி நிகழ்த்திய Breaking Record!

0
Century அடிச்சது மட்டும் சாதனை இல்ல.. இன்னொன்னும் இருக்கு - விராட் கோலி நிகழ்த்திய Breaking Record!
Century அடிச்சது மட்டும் சாதனை இல்ல.. இன்னொன்னும் இருக்கு - விராட் கோலி நிகழ்த்திய Breaking Record!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி சதம் அடித்ததன் மூலம் T20 தொடரில் தனது முதல் பங்களிப்பை பதித்துள்ளார்.

அசத்தலாக களமிறங்கிய விராட்!!

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 212 ரன்கள் குவித்து எதிரணியான ஆப்கானிஸ்தானை 101 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதில் அணியின் வெற்றிக்கு விராட் கோலி ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளார். இவர் 61 பந்துகளை எதிர் கொண்டு 122 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் T20 கிரிக்கெட் வரலாற்றில் தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் இவர் கடந்த மூன்று வருடங்களாக மோசமான பார்மில் விளையாடி வந்ததால் பலரது விமர்சனத்திற்கும் ஆளானார். இந்நிலையில் இவரது இந்த சதத்தின் மூலம் பாராட்டைப் பெற்று T20 உலகக்கோப்பைக்கான தனது இடத்தையும் தக்க வைத்துக் கொண்டார். மேலும் T20 கிரிக்கெட் தொடரில் தனி ஒரு வீரராக இருந்து ஒரு போட்டியில் ஆட்டம் இழக்காமல் அதிக ரன் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக ரோகித் சர்மா(118), சூரியகுமார் யாதவ்(117), கே எல் ராகுல்(110) ஆகியோர் உள்ளனர். விராட் கோலி கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது சதத்தை பதிவு செய்தார். அதன் பிறகு இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக ஒரு சதம் கூட அடிக்காமல் இருந்த விராட் கோலி இன்று சதம் அடித்து தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். சதம் அடித்த பிறகும் அவரது ஆட்டத்தில் சற்றும் குறைவு ஏற்படாமல் கடைசிவரை தனது ருத்ர தாண்டவத்தை வெளிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here