20 ஓவர் போட்டிகளுக்கான பேட்டிங், ஆல்ரவுண்டர், பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலை ICC வெளியிட்டுள்ள நிலையில் மீண்டும் பாகிஸ்தான் அணியை சேர்ந்த வீரர் முதலிடம் பிடித்துள்ளார்.
ரிஸ்வான் முதல் இடத்திற்கு முன்னேற்றம்!
20 ஓவர் வடிவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்டிங், ஆல்ரவுண்டர் மற்றும் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது நடைபெற்று வந்த அனைத்து போட்டிகளின் முடிவில் ICC தரவரிசை பட்டியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. டி20 பேட்டிங் தரவரிசை பட்டியலுக்கான முதலிடத்தில் பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் முதல் இடத்தில் உள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதே அணியை சேர்ந்த பாபர் அசாம் 2 வது இடத்திலும், 3வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஐடன் மார்க்ராம் மற்றும் 4வது இடத்தில் இந்திய வீரரான சூர்யகுமார் யாதவ் உள்ளார். இதில் இந்திய வீரரான சூர்யகுமார் 2 ம் இடத்தில் இருந்து 4ம் இடத்திற்கு பின் தங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேசில்வுட் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
இதை தொடர்ந்து தென் ஆப்ரிக்கா வீரர் ஷம்சி 2வது இடத்திலும், இங்கிலாந்தை சேர்ந்த அடில் ரஷித் 3வது இடத்தையும் பிடித்துள்ளனர். அதே போன்று ஆல்ரவுண்டருக்கான தரவரிசை பட்டியலில் ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த முகமது நபி முதல் இடத்திலும், பங்களாதேஷ் அணியை சேர்ந்த ஷகிப் அல் ஹசன் 2வது இடத்திலும் இங்கிலாந்து அணி வீரரான மொயின் அலி 3 வது இடத்திலும் உள்ளனர். இதில் இந்திய வீரரான ஹர்திக் பாண்டியா 5 வது இடத்திற்கு பின் தங்கியுள்ளார்.