மறைமுகமாக கலாய்த்த இயக்குனருக்கு தக்க பதிலடி கொடுத்த அஸ்வின் – அவரே வெளியிட்ட பதிவு!!

0

சர்ச்சை நடிகர்களில் ஒருவரான குக் வித் கோமாளி அஸ்வின் தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்ட ஸ்டோரியால் மீண்டும் பிரச்சனையில் சிக்கியுள்ளார்.

நடிகர் அஸ்வின்:

ஆரம்ப காலகட்டத்தில் வாய்ப்புக்காக பல இடங்களுக்கு அலைந்து திரிந்தவர் தான் நடிகர் அஸ்வின். மேலும் அவர் எங்கு சென்றாலும் அவருக்கு ஏமாற்றமே மிச்சம். அதன் பிறகு கடந்த 2015ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி சீரியலில் நடித்து பெயர் வாங்கினார். இருந்தாலும் அவரின் நடிப்பு ரசிகர்களை கவரவில்லை. ஆனால் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டியெல்லாம் பரவினார்.

அதனை தொடர்ந்து மவுசு எக்கச்சக்கமாக இருந்தது. பல கன்னிப்பெண்கள் கனவு நாயகனாக திகழ்ந்தார். அதன் பின்னர் நன்றாக போய் கொண்டிருந்த இவரது சினிமா பயணம், முதல் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் பேசிய பேச்சால் ஒரேடியாக முறிந்து போனது. தனக்கு தானே சூன்யம் வைத்து கொண்டார். இது குறித்து பல நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளினர். இந்நிலையில் நடிகர் அஸ்வின் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது அண்மையில் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் ஓடிடியில் தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் சீரிஸ் வெளிவந்துள்ளது. அதில் பல காட்சிகள் நடிகர் அஸ்வினை கலாய்ப்பதை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ரிவஞ்ச் எடுக்கும் விதமாக நடிகர் அஸ்வின் தனது இன்ஸ்டா பக்கத்தில், ” தங்கள் பிரைன் பியூட்டி கிடையாது பிரைன் லஸ் பியூட்டி என்று குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமின்றி கடைசியில் இது புரிந்தவன் பிஸ்தா” என்று பதிவிட்டுள்ளார். இந்த ஸ்டோரியை பல நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். மேலும் நடிகர் அஸ்வின் தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸை இயக்கிய இயக்குனர் அறிவழகனை மறைமுகமாக பேசியுள்ளார் என்று நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here