யுஎஸ் ஓபன் : முதல் முறையாக அரையிறுதிக்குள் நுழைந்த வீரர்கள்!

0
யுஎஸ் ஓபன் : முதல் முறையாக அரையிறுதிக்குள் நுழைந்த வீரர்கள்!
யுஎஸ் ஓபன் : முதல் முறையாக அரையிறுதிக்குள் நுழைந்த வீரர்கள்!

அமெரிக்க ஓபன் காலிறுதி சுற்றுக்கான ஆட்டத்தில் ஓன்ஸ் ஜபியர், கரேன் கச்சனோவ் ஆகியோர் சிறப்பாக விளையாடி அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.

சிறப்பாக விளையாடிய வீரர்கள்!

நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவிற்கான ஆட்டத்தில் ரஷ்யாவின் 27 ஆம் நிலை வீரரான கரேன் கச்சனோவ், நிக் கிர்கியோஸை எதிர்கொண்டார். இதில் சிறப்பாக விளையாடிய கச்சனோவ் 7-5, 4-6, 7-5, 6-7 (3/7), 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி முதன் முறையாக அரை இறுதிப் போட்டிக்குள் நுழைந்து அசத்தியுள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவிற்கான ஆட்டத்தில் ஆப்பிரிக்கா பெண்மணி ஓன்ஸ் ஜபியர், ஆஸ்திரேலியாவின் அஜ்லா டோம்லஜனோவிச்சை எதிர்கொண்டார். இதில் சிறப்பாக விளையாடிய ஓன்ஸ் ஜபியர் 6-4, 7-6 (7/4) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி போட்டிக்குள் நுழைந்து அசத்தியுள்ளார். மேலும், இவர் இதற்கு முன் நடைபெற்ற அனைத்து டென்னிஸ் தொடர்களில் வெற்றி பெற்றதன் மூலம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் வரலாற்றில் முதன் முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க பெண்மணி என்ற சாதனையை ஓன்ஸ் ஜபியர் படைத்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here