தென்னிந்தியாவின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் யூடூப்பில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்களை பெற்று வருகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன்:
சின்னத்திரையில் தனது கலைப் பயணத்தை தொடங்கி பல கஷ்டங்களை கடந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி, டைமிங் காமெடி மற்றும் மிமிக்ரி செய்து மக்களை பொழுதுபோக்கி பிரபலமானவர் இவர். அதன் பின்னர் இயக்குனர் பாண்டிராஜ் கண்ணில் பட்ட நடிகர் சிவகார்த்திகேயன் மெரினா என்ற திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார்.
அதனை தொடர்ந்து எதிர்நீச்சல்,வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ போன்ற திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தது. மேலும் அண்மையில் வெளியான டான் திரைப்படம் பல கோடி வசூலை அள்ளியது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் மீண்டும் ஒரு சாதனையை செய்துள்ளார். அதாவது, இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படம் பிரின்ஸ். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் படமாக்கப்பட்டு வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் பிரின்ஸ் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இதனை தொடர்ந்து இந்த படத்தில் இடம்பெற்ற ‘பிம்பிலிக்கி பிலாபி’ என்ற பாடலை தென்னிந்தியாவின் மிகப்பெரிய மியூசிக் லேபலான ஆதித்யா மியூசிக் யூடூப்பில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த பாடலை கிட்டத்தட்ட 5.5 மில்லியன் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ஒரு பாடல் இந்த அளவு பிரபலமானது இதுவே முதல் முறை என்றால் மிகையாகாது.