பிக்பாஸ் சீசன் 5 வெற்றியை தொடர்ந்து விரைவில் சீசன் 6 தொடங்கப்பட உள்ள நிலையில் அதை குறித்த ஒரு சூப்பரான தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 6:
இந்தியாவின் முன்னணி தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல், ரியாலிட்டி ஷோ என அதிகமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதில் மிகவும் மக்கள் விரும்பி பார்த்த ரியாலிட்டி ஷோ பிக்பாஸ் என்றால் மிகையாகாது.
விஜய் டிவியை டிஆர்பியில் முதல் இடத்தை பிக்பாஸ் நிகழ்ச்சி பிடித்து தந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் மக்களின் வரவேற்பை பெற்ற இந்த ஷோ 5 சீசன்களை கடந்து தற்போது 6வது சீசனை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் பிரபலங்கள் மட்டுமின்றி பாமர மக்களும் கலந்து கொள்ளலாம் என்று பிக்பாஸ் இயக்குனர் தெரிவித்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனால் ஏராளமான மக்கள் போட்டி போட்டு விஜய் டிவியை நாடி வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 6யை குறித்து முக்கியமான ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது, விறுவிறுப்பாக பிக்பாஸ் சீசன் 6 தொடங்குவதற்கு வேலைப்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிக்பாஸ் சீசன் 6 யை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனை தொடர்ந்து புதிதாக ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் சீசன் 6 ப்ரொமோ படமாக்கப்பட்டதாம். மேலும் படமாக்கப்பட்ட ப்ரொமோவை வருகிற செப்டம்பர் 9ம் தேதி பிக்பாஸ் 6வது சீசன் ப்ரோமோ வெளியாகும் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இந்த சீசனையும் கமல் தொகுத்து வழங்குவது குறிப்பிடத்தக்கது.