ஐயோ.. அப்போ புகழுக்கு இது இரண்டாவது கல்யாணமா? – தீயாய் பரவும் ரகசிய திருமண புகைப்படங்கள்!

0
ஐயோ.. அப்போ புகழுக்கு இது இரண்டாவது கல்யாணமா? - தீயாய் பரவும் ரகசிய திருமண புகைப்படங்கள்!

விஜய் டிவியின் பேமஸ் நடிகரான புகழ் கடந்த ஆண்டே அவரது காதலி பென்சியாவை பதிவு திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.

புகழ் திருமணம்:

விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி ஷோ மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகர் புகழ். அவருடைய எதார்த்தமான பேச்சுக்கும், முகத்தில் காட்டும் பாவனைகளுக்கும் மக்கள் அடிமையாகினர். இதனை தொடர்ந்து காமெடி நடிகனாக சினிமா துறையில் வலம் வந்த நிலையில் தற்போது ஹீரோவாக மிஸ்டர் ஜூ கீப்பர் படத்தில் அறிமுகமாக இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு காதலி பென்சியாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் கடந்த ஆண்டே அவரது காதலி பென்சியாவை பதிவு திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன. இவர்கள் காதலை பெற்றோர்கள் ஏற்று கொள்ளாததால் யாருக்கும் தெரியாமல் நண்பர்கள் முன்னிலையில் சென்ற ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது வளர்ந்து வரும் காமெடி நடிகனாக இருப்பதால் பெற்றோர்கள் அவர்கள் காதலை ஏற்றுக் கொண்டு உள்ளனர். இதனால் மிக எளிமையாக திருமணத்தை தற்போது நடத்தி முடித்துள்ளனர். இவர் பதிவு திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here