புதிய தொழில் களமிறங்கும் விராட் கோலி – கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா?

0
புதிய தொழில் களமிறங்கும் விராட் கோலி - கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா?
புதிய தொழில் களமிறங்கும் விராட் கோலி - கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா?

சர்வதேச தொடர்களின் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மும்பையில் ஹோட்டல் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஓட்டல் தொடங்கும் விராட் கோலி!

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல பேட்ஸ்மேனும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி பாலிவுட் நடிகை அனுஷ்காவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் தற்போது இந்திய அணிக்காக ஆசிய கோப்பை தொடரில் விளையாடி வருகிறார். நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோலி உலகில் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் 61 வது இடத்தில் உள்ளார். மேலும் தமிழ் திரையுலகில் பல்வேறு விளம்பரங்களிலும் நடித்து வருவாய் ஈட்டி வருகிறார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதன்படி அவரது ஆண்டு வருமானம் மட்டுமே 200 கோடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இவர் தற்போது சைடு பிசினஸ் ஆக உணவகம் தொடங்க உள்ளார். அதாவது மறைந்த பிரபல பாலிவுட் பாடகர் கிஷோர் குமாருக்கு சொந்தமான பங்களா ஒன்று மும்பையில் உள்ளது. அந்த பங்களாவை மாற்றி அமைத்து உணவகமாக மாற்ற விராட் கோலி அனுமதி வாங்கி உள்ளாராம். அதன்படி அந்த பங்களாவில் ரெஸ்டாரன்ட் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.

இந்த தகவலை கிஷோர் குமாரின் மகன் அமீத் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா மும்பை கடற்கரையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அலிபாக் பகுதியில் 8 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை வாங்கி உள்ளனர். இந்த பகுதியில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் பாலிவுட் நடிகர்கள் உள்ளிட்டோரும் வீடு, நிலம் வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here