தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சரத்குமாருடன், கொண்ட பிரச்சனையின் காரணமாக முக்கிய இயக்குனர் ஒருவர் அவருடன் 17 ஆண்டுகளாக பேசாமல் இருந்து வருகிறார்.
முக்கிய அப்டேட்:
தமிழ் சினிமாவில் இயக்குனர் சிகரமாக விளங்குபவர் பாரதிராஜா. இவர் இயக்கத்தில் வெளிவந்த கிழக்கு சீமையிலே, மண்வாசனை, முதல் மரியாதை உள்ளிட்ட அனைத்து படங்களும் மிகப் பெரிய அளவில் ரீச் ஆனது. இவர் சினிமாவில் ராதிகா, ராதா, பாக்யராஜ், நெப்போலியன் உள்ளிட்ட பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த நிலையில், தற்போது வரை குணச்சித்திர நடிகராக நடித்து வரும் பாரதிராஜா 17 ஆண்டுகளாக டாப் நடிகரான சரத்குமாருடன் இணைந்து நடிக்காமல் உள்ளார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
தகப்பன்சாமி என்ற படத்தில் இருவரும் இணைந்து நடிக்க இருந்த நிலையில், காவிரி பிரச்சனை காரணமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின் பொதுவெளியில் சண்டை ஏற்படும் அளவிற்கு முற்றிவிட்டது.
இதனால், அவர்கள் இடையிலான கூட்டணி முறிந்து விட்டதாக பாரதிராஜா தெரிவித்தார். இந்த பிரச்சனை காரணமாக 17 ஆண்டுகளாக இருவரும் பேசிக் கொள்ளாமல் உள்ளனர். இந்த செய்தியை தயாரிப்பாளர் தேனப்பன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.