கல்யாணம் முதல் காதல் வரை எனும் தொடரில் நடித்து ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் அதற்கு முன்பே செய்தி வாசிப்பாளராக இருந்தாலும் இவரை பிரபலப்படுத்தியது அந்த தொடர் தான்.
பின்னர் வெள்ளித்திரையில் இவருக்கு கால் பதிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேயாத மான், மாபியா, யானை, ஹாஸ்டல் உள்பட பல படங்களில் நடித்து தற்போது வளர்ந்து வரும் நாயகி என்ற இடத்தை பிடித்துள்ளார். மேலும் தன் கேரியரை தொடங்கிய குறுகிய காலத்திலேயே டாப் இயக்குனரான சங்கர் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது கமலின் இந்தியன் 2 படத்தில் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளார். இந்நிலையில் பிரியா பவானி சங்கர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.