தமிழக காவலர்களுக்கான விடுப்பு அறிவிப்பு – அரசு வெளியிட்ட தகவல்!

0
தமிழக காவலர்களுக்கான விடுப்பு அறிவிப்பு - அரசு வெளியிட்ட தகவல்!
தமிழக காவலர்களுக்கான விடுப்பு அறிவிப்பு - அரசு வெளியிட்ட தகவல்!
தமிழக காவலர்களுக்கான விடுப்பு அறிவிப்பு – அரசு வெளியிட்ட தகவல்!

தமிழகத்தில் காவல் ஆய்வாளர்களுக்கு வாரந்தோறும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது மற்றொரு விடுமுறை குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

காவலர்களுக்கு விடுமுறை

தமிழகத்தில் காவல்துறையினர் மக்களின் நலன் காக்க இரவும் பகலும் அயராது உழைத்து கொண்டு வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு விடுமுறை நாட்கள் என்பது மிகவும் குறைவாகவே அளிக்கப்படுகிறது. அத்துடன் போலீசாருக்கு பண்டிகை நாட்கள், தேச விடுமுறை நாட்கள் உள்ளிட்ட அரசு விடுமுறை நாட்கள் எதுவும் அளிக்கப்படுவதில்லை. இதனாலேயே போலீசார்கள் விரைவில் நோய்வாய்ப் படுகின்றனர். மேலும் மன அழுத்தம் அதிகரித்து அவர்களின் குடும்பத்திலும் பல்வேறு பிரச்சனைகளும் ஏற்படுகிறது. ஆதலால் போலீசாருக்கு விடுமுறை நாட்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்த விடுமுறை தினத்தில் தான் அவர்கள் குடும்பத்து உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட்டு மனச் சுமையை குறைக்க முடியும். அத்துடன் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அவர்களுக்கு ஓய்வு கிடைக்கும். இதனால் தற்போது பல்வேறு மாநிலங்களில் காவல் துறையினருக்கு ஏராளமான சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் போலீசாருக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அத்துடன் இது தொடர்பாக தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் ஏற்கனவே காவல் ஆய்வாளர்களுக்கு வாரந்தோறும் விடுமுறை அளிக்கப்படுவது நடைமுறையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காவல் துறையில் உள்ள 10,508 காவலர்கள் பயன் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு காவலர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here