பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார், சந்திரலேகா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர். பின்னர் குடும்ப உறவுகள் காரணமாக நடிப்பிற்கு பிரேக் விட்டார். இடை இடையே இவரின் சொந்த வாழ்க்கை பற்றி அவ்வவ்போது இணையத்தில் சர்ச்சை பேச்சு எழுவது வழக்கம்.
வெகு ஆண்டுகள் கழித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும் பீட்டர் பால் என்பவரை மூன்றாம் திருமணம் செய்து அவரையும் பிரிந்து பெரிய சர்ச்சையில் சிக்கினார். அதே சமயம் சின்னத்திரையில் குக் வித் கோமாளி, பிபி ஜோடிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார் வனிதா.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
தற்போது சென்னையில் துணி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் நைட் பார்ட்டி ஒன்றை நடத்தியுள்ளார் வனிதா. இந்த பார்ட்டிக்கு ரோபோ சங்கர், ப்ரஜன் உள்பட பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் வனிதா.