என் கணவருடன் விவாகரத்தா?? முதல் முறையாக மவுனம் கலைத்த விஜய் டிவி பிரியங்கா!!

0
என் கணவருடன் விவாகரத்தா?? முதல் முறையாக மவுனம் கலைத்த விஜய் டிவி பிரியங்கா!!

விஜய் டிவி முன்னணி தொகுப்பாளினியான பிரியங்கா, தனது கணவருடன் விவாகரத்தா? என்ற சர்ச்சைக்கு அதிரடி பதில் ஒன்றைக் கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

 சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி :

விஜய் தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வருபவர் பிரியங்கா. இவர் மா கா பா ஆனந்த் உடன் இணைந்து, தற்போதைய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அதுபோல சவுண்ட் பார்ட்டி, திவால், ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு, தான் பணியாற்றிய அதே நிகழ்ச்சியில் டெக்னிசியன் ஆக வந்த பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தன் கணவருடன் எடுத்த போட்டோக்களை அடிக்கடி பகிர்ந்து வந்த இவர் சில ஆண்டுகளாக, எந்த தகவலையும் வெளியிடாமல் இருந்து வந்தார்.

இதனால் பிரியங்கா தன் கணவரை விவாகரத்து செய்து விட்டதாக வதந்தி கிளம்பியது. இந்த நிலையில், ரசிகர் ஒருவர் சமீபத்தில் பிரியங்காவிடம் எல்லாவற்றையும் எப்படி சாதாரணமாக எடுத்துக் கொள்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த இவர், நம்மை நன்றாக புரிந்து கொள்ளும் கணவர் இருந்தால் போதும் எல்லாமே சாத்தியமாகும் என தெரிவித்து, விவாகரத்து குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here