தனது பிட்னஸ் விஷயத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா, எந்த நிலையிலும் இந்த ஒர்க்கவுட் செய்வதை மட்டும் நிறுத்த மாட்டேன் என உறுதியாக தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா உறுதி :
தனது முன்னாள் கணவர் தனுஷ் உடனான விவாகரத்துக்குப் பின், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தொடர்ந்து தனது சினிமா வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். இதையடுத்து, அவர் நடிகர் ராகவா லாரன்ஸுடன் ஒரு படத்தை இயக்கப்போவதாக அண்மையில் அறிவித்தார். மேலும், பாலிவுட்டில் நேரடியாக ஒரு படத்தை இயக்க உள்ளார். சமீபகாலமாக தனது பிட்னஸ் விஷயங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் இவர், முரட்டுத்தனமானாக வொர்க் அவுட் செய்யும் வீடியோவை சமீபத்தில் வெளியிட்டார்.
இந்த வீடியோவில், என்ன நடந்தாலும் தான் ஒர்க் அவுட் செய்வதை மட்டும் விடமாட்டேன் என்று கேப்ஷனில் பதிவிட்டுள்ளார். உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது, தான் அணிந்திருந்த ஷூ கழன்று விழுந்தாலும், பரவாயில்லை என்று வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அவரது மன உறுதிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
After a 40km ride when shoes slip while mountain climbers,burpees look ? like crawlys, u swing while abs you know your “fry”dayed ! ??#workoutnomatterwhat #fridayfeels pic.twitter.com/lsvFD5HH6A
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) May 20, 2022
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்