ட்விட்டரில் கொண்டுவரப்படும் அதிரடி மாற்றங்கள் – எலான் மஸ்க் போட்ட மாஸ்டர் பிளான் இதுதான்!!

0
எலான் மஸ்க் எடுத்த பரபரப்பு முடிவு.. அடுத்து அதைத்தான் வாங்க போறேன் - தீயாய் பரவும் சமூகவலைத்தள பதிவு!

அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், பாதுகாப்பு அம்சங்களுக்காக பல்வேறு மாற்றங்களை ட்விட்டரில் ஏற்படுத்த முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்

முக்கிய மாற்றங்கள்:

உலகின் பெரும்பாலான மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்று ட்விட்டர். இந்த நிறுவனத்தின் பங்குகளை எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி, 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார். இதனை அடுத்து, இந்த ட்விட்டர் தளத்தில் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்படும் என்றும் அனைவரும் இனி சுதந்திரமாக ட்விட்டரில் பேசலாம் என்றும் எலான் மஸ்க் அறிவித்திருந்தார்.

இதற்கான, முக்கிய அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, ட்விட்டர் மெசேஜ்களுக்கு (DM) End To End Encryption என்ற பாதுகாப்பு அம்சத்தை வழங்கப் போவதாகவும், இதன் மூலம் அனைவரும் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பேசலாம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சியில் மூழ்கிய நடிகர் விஜயகாந்த் – ட்விட்டர் பதிவால் கண்கலங்கி போன ரசிகர்கள்!!

ட்விட்டரில், அல்காரிதம்களை Open Source செய்வதன் மூலமும், அனைத்து மனிதர்களும் டுவிட்டர் பயன்படுத்துவது அங்கீகரிப்பதன் மூலம், சிறந்த மாற்றத்தை கொண்டு வர முடியும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.  இதற்காக சமூகத்துடன் இணைந்து பணியாற்ற தான் தயார் என்றும் அறிவித்துள்ளார். எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய பிறகு இவரை பின்பற்றும் பயனர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here