அதிர்ச்சியில் மூழ்கிய நடிகர் விஜயகாந்த் – ட்விட்டர் பதிவால் கண்கலங்கி போன ரசிகர்கள்!!

0
அதிர்ச்சியில் மூழ்கிய நடிகர் விஜயகாந்த் - டுவிட்டர் பதிவால் கண்கலங்கி போன ரசிகர்கள்!!
அதிர்ச்சியில் மூழ்கிய நடிகர் விஜயகாந்த் - டுவிட்டர் பதிவால் கண்கலங்கி போன ரசிகர்கள்!!

மறைந்த பழம்பெரும் நடிகரான சலீம் கவுஸ் அவர்களின் மரணம் தனக்கு, மிகுந்த மன வேதனையை தருவதாக நடிகர் விஜயகாந்த் ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

நடிகர் உருக்கம்:

தமிழ் சினிமாவின், பழம்பெரும் வில்லன் நடிகரான சலீம் கவுஸ் மும்பையில் நேற்று காலமானார். 70 வயதான இவர், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இறந்ததாக நேற்று அறிவிக்கப்பட்டது. இவர், கமல், விஜயகாந்த், அஜித் மற்றும் விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இதுபோக தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், இறந்த சலீம் குறித்து நடிகர் விஜயகாந்த் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது, தன்னுடன் இணைந்து சின்ன கவுண்டர் என்ற படத்தில் நடித்து மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய, சலீம் அவர்களின் மறைவு அதிர்ச்சி அளிப்பதாகவும், மிகச் சிறந்த நடிகரும், பழகுவதற்கு நல்ல மனிதராகவும் இருந்த அவரின் இறப்பு செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்து இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். தற்போது, இந்த ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here