பிக்பாஸ் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் உருவாகி வரும் டாடா திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
வைரல் போட்டோ:
விஜய் டிவியின் சீரியல் மூலம், அறிமுகமாகி பிக் பாஸ் வாயிலாக புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகர் கவின். இவர் நடிப்பில் வெளியான லிப்ட் திரைப்படத்தை தொடர்ந்து, தற்போது இவர் ஊர்க்குருவி உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் உருவாகி வரும், டாடா என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் பா. ரஞ்சித் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த போஸ்டரில் கவின், கையில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு கூட்ட நெரிசலில் பரிதாபமாக நிற்பது போல் காட்டப்பட்டுள்ளது. இந்தப் போஸ்டரை பார்க்கும் போது நடிகர் கவின் இந்த படத்தில் அப்பாவாக நடிக்கிறார் என பேசப்பட்டு வருகிறது. இதே கதைக்களத்துடன் பாலிவுட் நடிகர், வில் ஸ்மித் நடிப்பில் Pursuit of Happiness என்ற படம் வெளியாகி விருதுகளை வாங்கிக் குவித்தது. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படம் ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து நடிகர் கவினின் இந்த படமும் இதே போல தான் இருக்கும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Happy to Launch the First Look Poster of #DADA Produced by @ambethkumarmla of @OlympiaMovies Starring @Kavin_m_0431 and @aparnaDasss in lead. Directed by @ganeshkbabu
All the best to the entire team@ungalKBhagyaraj @APVMaran @MonicaChinnako1 @ActorHachu @TheDhaadiBoy@Ezhil_DOP pic.twitter.com/Skge0gudbS— pa.ranjith (@beemji) April 21, 2022
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்