நம் அனைவருக்கும் மீன் வறுவல் என்றால் பிடிக்கும். இந்நிலையில் இந்த பதிவில் வஞ்சர மீன் சுவையில் சைவ வஞ்சர மீன் வறுவல் எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம்.
ஏதாச்சும் ஒன்னை காட்டுங்க.., மொத்தமா காட்டுனா எதை பார்க்குறது பூனம்., கொழுத்த மேனியை பார்த்து மூடாகிய ரசிகர்கள்!!
தேவையான பொருட்கள்:
வாழைக்காய் – 4
சோள மாவு – 3 டீஸ் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1/2 டீஸ் ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ் ஸ்பூன்
மிளகு தூள் – 1/2 டீஸ் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1/2 டீஸ் ஸ்பூன்
எண்ணெய் – தே.அளவு
உப்பு – தே.அளவு
செய்முறை:
வாழைக்காயை சுடுதண்ணிரில் வேகவைத்து தோலுறித்து எடுத்து கொள்ளவும். இப்போது வாழைக்காயை நீளவாக்கில் வெட்டி நடுவில் மட்டும் சிறு துளை போன்று வெட்டி மீன் வடிவத்திற்கு வறுப்பதற்கு வைத்து கொள்ளவும்.
இப்போது சோள மாவு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்கு கிளறி வாழைக்காயை அதில் போட்டு பிசறி 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு வாழைக்காயை பொன்னிறம் ஆகும் வரை பொரித்து எடுத்துக்கொள்ளவும். இப்போது வஞ்சர மீன் சுவையில் சைவ வஞ்சர மீன் வறுவல் ரெடி.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்