தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக கொடிகட்டி பறந்து வரும் நடிகர் விஜய். அவர் நடிக்கும் படங்கள் வசூல் சாதனை செய்ய தவறியதில்லை. கடைசியாக வெளிவந்த பிகில் படமும் மிகப்பெரிய வசூலை அள்ளிக் குவித்தது. இந்நிலையில் அவரின் மகன் சினிமாவில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது.
மாஸ்டர்க்கு வெயிட்டிங்:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் நடித்த மாஸ்டர் படத்தின் வெளியீடு கொரோனா வைரஸ் பரவலால் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. அதன் ரிலீசிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்படம் நாடு முழுவதும் வெளியாக பல மொழிகளில் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது விஜயின் மகன் சஞ்சய் விஜய் சேதுபதி தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது. இதற்கு விஜய் அனுமதி வழங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |